தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
சரிவு
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 43,280-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 50 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கும், கிலோ வெள்ளி ரூ.76,500-க்கு விற்பனையாகிறது.
அடுத்த நிமிடமே முடிவிற்கு வரப்போகும் ஈரான் யுத்தம் ..! மூன்று வாரத்தில் முடிப்பாரா ட்ரம்ப்..! IBC Tamil
பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம் IBC Tamil