வார முதலிலேயே சரசரவென குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
சரிவு
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ. 5,520 ஆகவும், சவரனுக்கு ரூ. 8 குறைந்து ரூ.44,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.4,522 ஆகவும், சவரனுக்கு ரூ. 8 குறைந்து ரூ.36,176 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.79.00 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனையாகிறது.