உச்சம் தொட்ட தங்கம் விலை; இப்படியே போனா எப்படி? ஷாக்கில் மக்கள்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.26) அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,895 ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 47,160 ரூபாயாகவும் உள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.81.00க்கும், கிலோ ரூ.81,000-க்கும் விற்பனையாகிறது.
வெளிநாடொன்றில் பதிவான பயங்கர துப்பாக்கி சூடு...! சுமார் 17 பேர் பலி - அதிகரிக்கும் பதற்றம் IBC Tamil
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil