பண்டிகை நாளான இன்று எகிறிய தங்கம் விலை - இப்போது வாங்கலாமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.25) அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ. 6,350 ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 47,040 ரூபாயாகவும் உள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.80.70க்கும், கிலோ ரூ.200 உயர்ந்து ரூ.80700-க்கும் விற்பனையாகிறது.
இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு IBC Tamil
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றொரு பேரழிவு திட்டம்! நிந்தாவூரில் சாரா பதுங்கியிருந்ததாக தகவல் IBC Tamil