தொடர்ந்து உயரும் தங்கம் விலை - இன்று எவ்வளவு ரேட் தெரியுமா?

Tamil nadu Today Gold Price
By Sumathi Dec 20, 2023 06:22 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை 

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.20) அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரம்

அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 5,835 ஆகவும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 46,680 ரூபாயாகவும் உள்ளது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ரூ. 4,780 ஆகவும், சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ. 38,240 ரூபாயாகவும் உள்ளது.

வெள்ளி விலை கிராம் ரூ.80.20க்கும், கிலோ ரூ.80,200க்கும் விற்பனையாகிறது.