எகிறிய தங்கம் விலை; இப்போது வாங்கலாமா? இன்றைய ரேட் இதுதான்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.19) அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 5,795 ஆகவும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 46,360 ரூபாயாகவும் உள்ளது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ. 4,747 ஆகவும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ. 37,976 ரூபாயாகவும் உள்ளது.
வெள்ளி விலை கிராம் ரூ.79.50க்கும், கிலோ ரூ.79,500க்கும் விற்பனையாகிறது.

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் திரைப்படம் : தடைவிதிக்குமாறு பொங்கியெழும் வைகோ மற்றும் சீமான் IBC Tamil
