வார தொடக்கத்திலேயே எகிறிய தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்.5) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,470க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.51,760க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.91.00க்கும், கிலோ ரூ.91,000 விற்பனை செய்யப்படுகிறது.
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil