மக்களே பல லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு.. தமிழக அரசு சூப்பர் திட்டம் - எப்படி விண்ணப்பிக்கலாம்?
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு புதிய திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதாவது முதல்வர் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கப்படும்.
இதன் மூலம் மக்களுக்கு, பொதுப் பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் வழிவகுக்க முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்.
சூப்பர் திட்டம்
2025 ஆண்டின் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும்,
கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதில், தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். B - Pharm அல்லது D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது சான்றுபெற்றவர்களின்,
ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகத்தை வரும் ஜனவரி மாதம் (2025) முதல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.