தமிழக அரசின் சூப்பர் திட்டம்..திருமணத்திற்கு 1 பவுன் தங்க நாணயம் - முழு விவரம் இதோ!

M K Stalin Tamil nadu DMK
By Swetha Sep 24, 2024 03:59 AM GMT
Report

திருமண உதவி திட்டங்களுக்கு 8 கிராம் தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தங்க நாணயம்

தமிழக அரசின் சமூக நலத் துறை திருமண உதவி திட்டங்களுக்காக 16 கிலோ தங்கம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல்,

தமிழக அரசின் சூப்பர் திட்டம்..திருமணத்திற்கு 1 பவுன் தங்க நாணயம் - முழு விவரம் இதோ! | 1 Pound Gold For Marriage Tn Govt Super Scheme

பெண்கள் நலத் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்படுகின்றன. அதாவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணம் திட்டம்,

பெண் குழந்தைகள் உயர் படிப்புகளை மேற்கொள்ள மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் என பெண்களின் வளர்ச்சி பாதையை சீரமைக்கும் வகையில், பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு சமூக நலத்துறையால் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்,

ஆதார் அட்டை; கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷன் வழங்கப்படாதா? தமிழக அரசு விளக்கம்!

ஆதார் அட்டை; கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷன் வழங்கப்படாதா? தமிழக அரசு விளக்கம்!

தமிழக அரசு

ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

தமிழக அரசின் சூப்பர் திட்டம்..திருமணத்திற்கு 1 பவுன் தங்க நாணயம் - முழு விவரம் இதோ! | 1 Pound Gold For Marriage Tn Govt Super Scheme

இத்திட்டத்தின் மூலம், பயனாளிகளுக்கு 1 பவுன் அதாவது 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. தற்போது தங்க நாணயம் வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த நான்கு திட்டங்களிலும் பயனாளிகளுக்கு தகுதி அடிப்படையில் நிதி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு ஒரு சவரன் அதாவது 22 காரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த 4 திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ரூ.48.83 கோடி செலவில் 8 ஆயிரம் எண்ணிக்கையிலான 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசின் சமூக நல ஆணையரகம் கோரியுள்ளது.