ஆதார் அட்டை; கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷன் வழங்கப்படாதா? தமிழக அரசு விளக்கம்!
Tamil nadu
Governor of Tamil Nadu
By Swetha
ரேஷனில் பொருட்கள் வழங்க கைரேகை புதுபிக்க வேண்டும் என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் அட்டை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில்
கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசு
கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை.
ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும், எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல். என்று தெரிவிக்கப்பாட்டுள்ளது.