மகனையும், கணவரையும் எப்படியாவது மீட்டு தாங்க - கதறும் தாய்!
கணவரையும், மகனையும் மீட்டு தருமாறு தாய் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கைது
14 வயது சிறுவன் ராய்ஸ்டன். இவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை மீன் பிடிக்க கடலுக்கு செலவது வழக்கம். இந்த தொழிலைதான் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் அவரது குடும்பம்.
இந்நிலையில், தந்தையும் சிறுவனும் கடலுக்குச் சென்றுள்ளார். அங்கு இலங்கை கடற்படையினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அவரது தாய் மெர்லின் கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தாய் வேண்டுகோள்
அதில், தனது மகன் வீட்டின் கடன் பிரச்சனையால் தான் கடலுக்குச் சென்றான். ஆனால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் உடல்நிலை சரியில்லாதவன். விடுமுறை நாட்கள் என்பதனால் மட்டுமே அவரது தந்தையுடன் கடலுக்குச் சென்றான்.
மனிதாபிமான அடிப்படையில் விடுவித்து என் மகனை ஒப்படைக்கவேண்டும். எனது கணவரையும் விடுவிக்கவேண்டும் என இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் வேண்டுதல் வைத்துள்ளார்.