வி.ஜே.சித்ரா மரண வழக்கு ;முதலமைச்சரை சந்திக்க உள்ளோம் - பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி..!

V. J. Chitra
3 நாட்கள் முன்

நடிகை சித்ரா வழக்கை மறுவிசாரணை நடத்த உத்தரவிடக்கோரி முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக அவரது பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

பிரபல வி ஜேவாக இருந்து வந்த சின்னத்திரை நடிகையாக புகழ் பெற்றவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.

வி.ஜே.சித்ரா மரண வழக்கு ;முதலமைச்சரை சந்திக்க உள்ளோம் - பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி..!

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தனியார் ஹோட்டல் அறையில் இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தனக்கும் சித்ரா மரணத்திற்கும் தொடர்பில்லை என்றார்.

இதற்கு காரணம் ஒரு மாஃபியா கும்பல் தான் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார். அவரின் மரணத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்மை நாட்களாக விஜே சித்ரா தற்கொலை குறித்து வெளியாகும் செய்திகள் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வி.ஜே.சித்ரா மரண வழக்கு ;முதலமைச்சரை சந்திக்க உள்ளோம் - பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி..!

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் பெற்றோர் பொய்யான தகவல்களை ஹேம்நாத் பரபரப்பி வருவதாகவும்,வழக்கிலிருந்து தப்பிக்க இது போன்று வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சித்ராவின் மரண வழக்கை மறுவிசாரணை நடத்துவது தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளனர்.    

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.