பெண் என்பதால் இன்ஜினியரிங் படிக்க மறுப்பு - ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி!
நான் பெண் என்ற ஒரே காரணத்திற்காக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க அனுமதிக்கவில்லை என இஸ்ரோ விஞ்ஞானி நிஹார் சாஜி தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானி
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள உள்ள ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் 16 வது பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் -1 திட்ட இயக்குனராக செயல்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நிஹார் சாஜி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,''சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நான் பெண் என்ற ஒரேய காரணத்தால் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிப்பதற்கான அனுமதி ,மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
கல்வி
தொடர்ந்து பேசிய அவர்,'' கல்வி என்பது பெண்களின் உரிமை ,கணியம் மற்றும் பாதுகாப்பிற்கு அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக படித்த பெண்கள் போயிருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றனர்.
மேலும் பெண்களின் திறன் மற்றும் மேம்பாட்டின் மூலமே இந்தியா வளர்ந்த நாடக மாற முடியும் என தெரிவித்தார். மேலும் பெண்கள் தங்களது எந்த சூழ்நிலையிலும் படிப்பை நவிடக்கூடாது என தெரிவித்தார்.