இஸ்ரோவில் கவுண்டவுன் குரல் கொடுத்த தமிழக விஞ்ஞானி காலமானார்!
ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி காலமானார். n
மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி. இவர் கடந்த 2012-ல் விண்ணில் ஏவப்பட்ட RISat 1 திட்ட இயக்குனராக பணியாற்றினார்.
ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலன் ஏவப்பட்ட நிகழ்வினை அவர் கவுன்ட்டவுன் தொடங்கி அதன் வெற்றிவரை அறிவித்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காலமானார்
இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமையன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விஞ்ஞானிகள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் பிவி வேங்கிடகிருஷ்ணன், "வளர்மதி அவர்களின் குரல் இனி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயல்படும் அடுத்தடுத்த இஸ்ரோ மிஷன்களில் ஒலிக்காது.
சந்திராயன்-3 தான் அவரது கடைசி கவுன்ட்டவுன். அவருடைய மறைவு சற்றும் எதிர்பாராதது. அவருக்காக வருந்துகிறேன்" என்று கூறியுள்ளார்.