36 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த எல்.வி.எம் 3 ராக்கெட்!
36 செயற்கைக் கோள்களுடன் எல்.வி.எம் 3 ராக்கெட். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ
இஸ்ரோவின் அதிக எடைகொண்ட ராக்கெட்டான எல்.வி.எம்.3 மூலம் பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு செலுத்துவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வணிக ரீதியில் ராக்கெட் ஏவுதலுக்கான உலகளாவிய சந்தையில் இஸ்ரோவும் இடம்பெறும் வகையில்
ஒன்வெப் நிறுவனத்துடன் இஸ்ரோ இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.
எல்.வி.எம் 3 ராக்கெட்.
ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் சோதிக்கப்பட்டு, அக்டோபர் 14 ம் எல்விஎம்3 ராக்கெட்டில் வைக்கப்பட்டன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து,
அதற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டு திட்டமிட்டபடி எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 36 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டிருப்பது
உலகளாவிய அளவில் இந்தியாவிற்கு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும், வணிக ரீதியிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு சர்வதேச அளவில் இது உதவும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.