அரசு பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் - TNSTC வெளியிட்ட அசத்தல் அப்டேட்
அரசு பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்வதை எளிதாக புதிய அப்டேட் ஒன்றை TNSTC வெளியிட்டுள்ளது.
அரசு பேருந்து முன்பதிவு
தமிழக அரசு பேருந்துகளில் பயணசீட்டு முன்பதிவை எளிமையாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.
இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (23 செப்டம்பர் 2024) தொடங்கி வைத்தார்.
புதிய அப்டேட்
முன்பதிவை எளிதாக்கும் வகையில் TNSTC இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவை முடிக்க குறைவான பக்கங்கள், சீட் தேர்வுக்கான கூடுதல் வடிகட்டி (Filters) விருப்பங்கள், பதிலளிக்கும் தன்மை(Responsive), அதிகமான சீட்கள் எண்ணிக்கையில் புக்கிங் நிறைவேற்ற உயர்வீதம் கொண்ட இணைய இணைப்பு போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
TNSTC செயலியில், விருப்பமாக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை வேகமாக முன்பதிவு முடிக்க மேம்பட்ட பயனாளர் அனுபவம் போன்ற அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை இணையதளம் மற்றும் செயலி மூலம் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) மற்றும் TNSTC பேருந்துகளில் தினசரி 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில் பயணிகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வசதிகளை கொண்டுள்ளது.