TNPSC group 4 - இத்தனை லட்சம் பேர் ஆப்சென்டா? ரிசல்ட் எப்பொழுது? வெளியான தகவல்
டிஎன்பிஸ்சி குரூப்-4 தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
குரூப் 4
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30-ந் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
10 வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி கொண்ட இத்தேர்வுக்கு முதுகலை, பொறியியல் என மொத்தம் 20,37,101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வு, தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நேற்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்த பலர் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் சோகத்துடன் கிளம்பி சென்றனர்.
இன்வேலிட் மதிப்பெண்
இந்த ஆண்டு முதல் முறையாக ‘ இன்வேலிட் (Invalid) மதிப்பெண்’ அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பதில்களை தேர்வு செய்யும் முறையில் ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்துவிட்டு, அதை அடித்து பின்னர் வேறொரு பதிலை பதிவிட்டால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும்.
மேலும் 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. சுமார் 4 லட்சம் பேர் குரூப் 4 தேர்வில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேர்வு முடிவு
தமிழ் பாட பகுதி எளிமையாக இருந்ததாகவும், கணித பகுதி மற்றும் பொது அறிவு சற்று கடினமாகவும், யோசித்து பதில் அளிக்கும் வகையில் இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்த காலிப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான பேர் தேர்வு எழுதியுள்ளதால் கட் ஆப் மதிப்பெண் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்வு முடிவு வெளியாக முன் காலி பணியிடம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளை 2025 ஜனவரி மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பையும், அதன்பின் கவுன்சிலிங்கையும் நடத்த டிடிஎன்பிஎஸ்சி தயாராகி வருகிறது.