TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Tamil nadu Education
By Sumathi May 25, 2024 03:30 AM GMT
Report

புதிய பாடத்திட்டங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

 டிஎன்பிஎஸ்சி 

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், ஆண்டுத்தோறும் தேர்வு அட்டவணையை வெளியிடும். தொடர்ந்து, அதில் மாற்றங்களையும் செய்து வருகிறது.

TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு! | Tnpsc Changed Syllabus For Group 2 Group 2A Exam

அதன்படி, கடந்த மாதம் குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ நிலையில் உள்ள பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படும். குரூப் 2 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : டிஎன்பிஎஸ்சி

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : டிஎன்பிஎஸ்சி


புதிய பாடத்திட்டம்

இந்நிலையில் குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், புதிய பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் தகுதி தாளும், பொது அறிவும் விரிவாக விடையளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

tnpsc

மேலும், தமிழ் தகுதி தாள் மட்டும் விரிவாக விடை அளிக்கும் வகையிலும், பொது அறிவு தாள் கொள்குறி முறையில் விடையை தேர்வு செய்யும் வகையிலும் புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பொது அறிவுத்தாளில், 50 சதவிகித வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவு சார்ந்தும்,

20 சதவிகித வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான கணக்கும், 30 விழுக்காடு வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.