டாஸ்மார்க் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு - வெளியான அறிவிப்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து டாஸ்மார்க் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மார்க் கடை
தமிழ் நாட்டில் 4ஆயிரம் மதுபான கடைகள் மற்றும் பார்கள் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய் அளவு வருவாய் ஈட்டப்படும். டாஸ்மார்க் கடை அனைத்து வேலை நாட்களிலும் திறக்கப்பட்டுடிருக்கும்.
ஆனால் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களுக்கு மற்றும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் .
சட்ட ஒழுங்கு
அந்த வகையில் நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதியான வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து டாஸ்மார்க் கடைகளை அன்று ஒருநாள் மட்டும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால், காவல் துறை சாா்பில் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.