மின் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு - விளக்கமளித்த தமிழ்நாடு மின் வாரியம்!
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு மின் கட்டண வசூலிப்பு குறித்த விதிகளில் புதிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதில் மாலை நேரங்களில், அதாவது பீக் அவர்ஸ் எனப்படும் உச்ச காலங்களில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தவும்,
பகல் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை 20 சதவீதம் வரை குறைக்கவும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அருவுறுத்தியிருந்தது. தற்போது இது குறித்து தமிழக மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக மின் வாரியம்
இதனை தொடர்ந்து, தமிழக மின் வாரியம் கூறுகையில், " தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஒழுங்குமுறை ஆணையத்திற்குத்தான் உள்ளது. தற்போதைய விதிகளின் படி, உச்ச நேர கட்டணம் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால்,
மத்திய அரசின் திருத்தங்களால் தமிழ்நாட்டில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின்னர் அபராத தொகை வசூல் செய்வது குறித்து, விதிகள் வகுக்கப்படாததால் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இருக்காது" என்று கூறியுள்ளது.