கடலில் பேனா சின்னம் : 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

M Karunanidhi DMK
By Irumporai Jun 22, 2023 11:19 AM GMT
Report

சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

 பேனா நினைவு சின்னம்

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

கடலில் பேனா சின்னம் : 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி | Pen Symbol In Sea Government 15 Conditions

15 நிபந்தனைகள்

தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. அதில், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். 

கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அவசரகால மீட்புப்பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட்ட வேண்டும்.

ஆமை இன பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மண் அரிப்பு, மணல் திரட்சி உள்ளிட்டவை குறித்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏதேனும் தவறான, போலியான தகவல் தெரியவந்தால் அனுமதி வாபஸ் பெறப்படும் எனவும் தெரிவித்து, 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.