உலகையே திரும்பி பார்க்க வைத்த செஸ் சாம்பியன்..குகேஷ் -க்கு தமிழக அரசு கொடுத்த ஷாக்!

Chess Tamil nadu
By Vidhya Senthil Dec 16, 2024 07:30 AM GMT
Report

  சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 குகேஷ்

2024ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் குகேஷ் கலந்து கொண்டு சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் டிங் லின்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

உலக செஸ் சாம்பியன் குகேஷ்..

மேலும், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி முதல் தமிழக முதலமைச்சர் வரை வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்த குகேஷ்-க்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

செஸ் சாம்பியன் பரிசுத்தொகை; அடேங்கப்பா.. குகேஷ் வரி மட்டும் இவ்வளவு கட்டணுமா?

செஸ் சாம்பியன் பரிசுத்தொகை; அடேங்கப்பா.. குகேஷ் வரி மட்டும் இவ்வளவு கட்டணுமா?

தமிழ்நாடு அரசு

இந்த நிலையில் , சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் இன்னோவா காரில் செஸ் சாம்பியன் குகேஷ் படத்துடன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

உலக செஸ் சாம்பியன் குகேஷ்..

மேலும் "The New King in.. The Kingdom of Chess" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.