2026 தேர்தலில் வெற்றி பெற உதயநிதி பரிகாரம் செய்தாரா? ரங்கராஜன் வெளியிட்ட வீடியோ - சர்ச்சை!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ‘Our Temples’என்ற பெயரில் யூடியூப் சேனல் மூலம் மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் உதயநிதி ஸ்டாலின் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் ஜோதிடர் கூறியதால் 2026 சட்டசபைத் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் 3 ஜீயர்களை அழைத்து பரிகாரம் செய்ததாகக் கூறியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது 5 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இதனையடுத்து நேற்று ஸ்ரீரங்கம் ரங்கராஜனை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் டெங்கு, கொசு, மலேரியா, கரோனாவை எதிர்க்க முடியாது.
ரங்கராஜன் கைது
அவற்றை ஒழிக்க வேண்டும். அதே போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும். சனாதனத்தை எதிர்ப்பதை விட அது ஒழிக்கப்பட வேண்டும். சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. இது சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரானது என்று பேசியிருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.