3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - ஏன், எப்போதெல்லாம் தெரியுமா?
3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து 20-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதனை முன்னிட்டு தொகுதி முழுவதும் 3 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் மூடல்
இந்நிலையில், அங்குள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று முதல் 5-ந் தேதி வரையும் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளான பிப்ரவரி 8-ந் தேதியும்
டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.