மதுரையில் 2 நாட்களுக்கு திடீர் 144 தடை உத்தரவு - என்ன காரணம்?
மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை, திருப்பரங்குன்றம் அருகில் சுப்பிரமணியசாமி கோவிலும், காசி விஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளது. மறுபுறம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேசமயம் முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தொடர்ந்து, சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு தர்காவில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா நடைபெற உள்ளதாக தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தன.
144 தடை உத்தரவு
தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் நாளை மதுரையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்து முன்னணி அமைப்பின் போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று காலை முதல் நாளை இரவு 12 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மேலும் பொது அமைதியை குலைக்கும் வகையில் போராட்டங்களும் தர்ணா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.