இந்தியாவிலே தமிழ்நாட்டில் அதிக ராம்சர் தளங்கள் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

M K Stalin Tamil nadu India
By Karthikraja Feb 02, 2025 11:43 AM GMT
Report

 தமிழ்நாட்டில் புதிதாக 2 ராம்சார் தளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சதுப்பு நிலங்கள்

சதுப்பு நிலங்கள் என்பது கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர்களுக்கு குறைவான ஆழம் கொண்ட பல்வேறு வகைப்பட்ட சூழல் தன்மைகளைக் கொண்ட நீர் நிலைகளாகும். 

இந்தியாவிலே தமிழ்நாட்டில் அதிக ராம்சர் தளங்கள் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | Ramsar Sites Increased To 20 In Tamilnadu

நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க, நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை குறைக்க, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்தைத் திடப்படுத்தி வளப்படுத்த, வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க என பல்வேறு பயன்பாடுகளுக்கு சதுப்புநிலங்களின் இருப்பு மிக முக்கியமானது

ராம்சார் தளங்கள்

நகரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் அழிந்து வரும் சதுப்புநிலங்களை காக்க பிப்ரவரி 2 ஆம் தேதி உலக சதுப்பு நில நாள் விடப்பட்டு வருகிறது. 

இந்தியாவிலே தமிழ்நாட்டில் அதிக ராம்சர் தளங்கள் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | Ramsar Sites Increased To 20 In Tamilnadu

சதுப்பு நிலங்களை பாதுகாத்து பராமரிப்பது தொடர்பான சர்வதேச ஒப்பந்தம், 1971 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் கையெழுத்தானது. அதன்படி, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள், ராம்சார் தளங்களாக அறிவிக்கப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 87 ராம்சார் தளங்கள் இருந்தது.

தற்போது தமிழ்நாட்டில் புதிதாக ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டு இந்தியாவில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக ராம்சார் தளங்கள் உள்ள மாநில பட்டியலில் 20 ராம்சார் தளங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "உலக ஈரநிலங்கள் நாளான இன்று, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியைப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20-ஆக உயர்ந்துள்ளது. 

இவற்றில் 19 இடங்கள் நாம் 2021-இல் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடங்கியதற்குப் பிறகு ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் நமது திராவிட மாடல் அரசு உறுதியாக உள்ளது. வளமான நமது இயற்கை மரபைக் காக்க மேலும் ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.