இனி தமிழில்தான் இனிஷியல் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு!

Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Sumathi Aug 23, 2022 07:51 AM GMT
Report

கையெழுத்தையும், பெயரின் முன் எழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறை 

பள்ளி பதிவேடுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கையெழுத்தையும் , பெயரின் முன் எழுத்தையும் தமிழில் எழுதுமாறு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இனி தமிழில்தான் இனிஷியல் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு! | Tn School Students Should Sign In Tamil

இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி மாணவர்கள் இனி தமிழில் பெயர் எழுதினால் இனிஷியலை கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்.

தமிழில் இனிஷியல்

பள்ளிக்கு மாணவர்கள் அளிக்கும் விண்ணப்பம் வருகைப்பதிவேடு பள்ளி , கல்லூரி முடித்து பெறுகின்ற சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்து (initial) தமிழ்பெயருக்கு முன் வழங்க வேண்டும்.

இனி தமிழில்தான் இனிஷியல் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு! | Tn School Students Should Sign In Tamil

மேலும் முதற்கட்டமாக பள்ளி தகவல் மேலாண்மை இணையப்பக்கத்தில் பராமரிக்கப்படும் மாணவர்களின் 30 பதிவேடுகளில் மாணவர்கள்,பெற்றோர்கள் பாதுகாவலர் பெயர்கள் தமிழில் பதிவேற்றம் செய்யும் போது அதனை தமிழ் முன்னெழுத்துடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.