1-12ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு
கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதையடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலும்,
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. மேலும் காலாண்டு தேர்வு விடுமுறை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை வெளியீடு
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும்.
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது.
அக்டோபர் 6-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.