பொங்கல் பரிசுத் தொகுப்பில் மாற்றம்? பொதுமக்கள் ஷாக் - உயர்நீதிமன்றம் சொன்னதென்ன?
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் உயர்நீதிமன்ற ஆலோசனை கவனம் பெற்றுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படும்.
அதன்படி, இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெறலாம்.
உயர்நீதிமன்றம் ஆலோசனை
இந்நிலையில், இந்த தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும், கரும்பு கொள்முதலுக்கான பணத்தை கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு,
"தமிழக அரசின் பல்வேறு திட்டங்களில், குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவதைப்போல, பொங்கல் பரிசுத் தொகையையும் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே? கரும்பு கொள்முதல் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே?
இதனால் தமிழக அரசுக்கு என்ன சிக்கல்வந்துவிட போகிறது. சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். இப்போது முடியாவிட்டாலும், அடுத்த பொங்கல் பண்டிகையின்போதாவது செய்யலாம்.
பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இதுகுறித்த மாற்றம் தொடர்பாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.