தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை - யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்!

Tamil nadu Education
By Sumathi Apr 22, 2024 04:29 AM GMT
Report

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கை

சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ், 25 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை - யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்! | Tn Reserve Seats Private Schools Admission Details

இதில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்படும். இந்நிலையில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

வீடு கட்ட ரூ.1 லட்சம் மானியம்; மத்திய அரசு திட்டம் - எப்படி விண்ணப்பிப்பது?

வீடு கட்ட ரூ.1 லட்சம் மானியம்; மத்திய அரசு திட்டம் - எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிப்பது? 

பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை - யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்! | Tn Reserve Seats Private Schools Admission Details

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். https://rte.tnschools.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப்பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் மே 28ம் தேதி குலுக்கல் நடத்தி குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள்.