ரேசன் கடைகளில் 2000 காலியிடங்கள்..எழுத்துத் தேர்வு இல்லை - உடனே Apply பண்ணுங்க!
நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நியாயவிலைக் கடை
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும்
நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிப் பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்-2000
பணி: விற்பனையாளர், கட்டுநர்
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி ,தமிழ் ,எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஓராண்டுக்கு மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகுரூ.8,600-ரூ.29,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, சீர்மரபினர் மற்றும் இந்த வகுப்புகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பில்லை. ஓசி பிரிவினர்- 32 வயது இருக்க வேண்டும் .
காலிப் பணியிடங்கள்
தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விண்ணப்பத்தாரரின் வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
அறிவிப்பு : தேர்வு செய்யப்பட்ட பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் பணிக்கு -ரூ.150 கட்டுநர் பணிக்கு- ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: https://www.drbcgl.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 7.11.2024