ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு - 98 சதவீதம் பேர் தோல்வி..!
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், 2 சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் கூட அதில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு
அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற வேண்டும்.
அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களை கொண்டது.
முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தாளில் தேர்ச்சி பெறுவோர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19 தேதி வரை இரு வேலைகளில் நடத்தப்பட்டது. கணினி வழியில் நடந்த இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
98 சதவீதம் பேர் தோல்வி
இதை தொடர்ந்து 2ம் தாள் கணினி வழித்தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 வரை நடத்தப்பட்டது. காலை, மாலை என இரு வேலைகளில் கணினி வழியில் மட்டுமே தேர்வு.
இந்த தேர்வை எழுத 4,01,986 பேர் பதிவு செய்த நிலையில், 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியிருந்தனர். 1.5 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 98 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.