ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்..இனி உணவு பொருட்கள் இப்படி தான் கிடைக்கும் - தமிழக அரசு!
ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் பாக்கெட் போட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள்
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
கடைகளில் உள்ள விலையை விட ரேஷனில் இந்த பொருட்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்படுகிறது. அதன்படி ரேஷனில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25க்கும், துவரம் பருப்பு ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். எனினும், வெகு நாட்களாகவே ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்றசாட்டுகள் எழுந்தது.
உணவு பொருட்கள்
அதனை சரிசெய்யும் வகையில், ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி, முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த முறையை மேலும் அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு தொகுதிகளிலும் இருக்கும் ஒரு ரேஷன் கடையை தேர்ந்தெடுத்து நடத்திய சோதனை அடிப்படையில் ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு மக்களிடம் இருந்து மக்களிடம் இருந்து கிடைக்கும் பெறும் வரவேற்பை பொருத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் திட்டத்தை விரிவுப்படுத்த உணவுப்பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.