இந்த 2 நாட்களுக்கு ரேஷன் கடை விடுமுறை - மாநிலம் முழுவதும் பறந்த உத்தரவு!
ரேஷன் கடைகளுக்கு 2 தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ரேஷன் கடைகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைச் சேர்ப்பதற்காகக் கடந்த ஆண்டு ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய வார விடுமுறை தேதிகளில் இயங்கின.
2 நாட்கள் விடுமுறை
அந்தவகையில் ஜூன் 15ஆம் தேதி சனிக்கிழமை, ஜூலை 20ஆம் தேதி சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு மாதத்தில் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், ஜூன் 15, 16 (இன்றும் நாளையும்) மற்றும் ஜூலை மாதத்தில் 20, 21 ஆகிய தேதிகளில் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.