பாரதத்தை ஒரு தேசமாக மதிக்காத தலைவர் ஸ்டாலின் - ஆளுநர் மாளிகை விமர்சனம்

M K Stalin R. N. Ravi Governor of Tamil Nadu TN Assembly
By Karthikraja Jan 12, 2025 03:30 PM GMT
Report

இத்தகைய ஆணவம் நல்லதல்ல என தமிழக முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது.

ஆளுநர் வெளிநடப்பு

2025 ஆம் ஆண்டின் முதலாவது தமிழக சட்டப்பேரவை கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆ,ம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். 

rn ravi

சட்டபேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு அளித்த உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் வெளிநடப்பு செய்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது - விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது - விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் கண்டனம்

ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்ததற்கு, திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது பாமக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தன. ஆளுநரின் செயலை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது.  

mk stalin

இதனை கண்டித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஆளுநர் உரையை வாசிக்காமல் போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. 

தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என கடுமையாக விமர்சித்திருந்தார். 

ஆணவம் நல்லதல்ல

இந்நிலையில் ஆளுநர் மாளிகை சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலடியாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்.

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. 

பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.