ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது - விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

M K Stalin R. N. Ravi Governor of Tamil Nadu TN Assembly
By Karthikraja Jan 06, 2025 10:30 AM GMT
Report

 ஆளுநர் ஏன் மனமில்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் வெளிநடப்பு

2025 ஆம் ஆண்டின் முதலாவது தமிழக சட்டப்பேரவை இன்று (06.01.2025) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். 

rn ravi

இன்று சட்டபேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் வெளிநடப்பு செய்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

ஆண்டின் முதல் கூட்டத்தொடர்..சட்டப்பேரவைக்கு வந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர் -நடந்தது என்ன?

ஆண்டின் முதல் கூட்டத்தொடர்..சட்டப்பேரவைக்கு வந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர் -நடந்தது என்ன?

மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. 

cm mk stalin

கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக கூறி திமுக சார்பில் நாளை(07.01.2025) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.