ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்.. வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன நடந்தது!

Tamil nadu
By Vinothini Oct 24, 2023 10:38 AM GMT
Report

பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டிரைக்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது எனறு கூறி சிறை பிடிக்கப்பட்ட 120 பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவித்தது.

tn-omni-bus-owners-association-withdrawn-strike

தற்பொழுது அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பால் கேனில் மூழ்கி கிடந்த 1 மாத குழந்தை.. சடலமாக மீட்பு, கதறிய அதிகாரி - என்ன நடந்தது?

பால் கேனில் மூழ்கி கிடந்த 1 மாத குழந்தை.. சடலமாக மீட்பு, கதறிய அதிகாரி - என்ன நடந்தது?

வாபஸ் அறிவிப்பு

இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் கூறுகையில், "தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் இயங்கும். மக்கள் பீதியடைய வேண்டாம். 90 சதவீத பேருந்துகள் எங்கள் சங்கத்தில் உள்ளன.

அறிக்கை

எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார். மேலும், அறிக்கையில், "தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 80% பேருந்துகளும் இன்று வழக்கம்போல் இயங்கும்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும், இன்று கட்டாயம் பேருந்துகள் இயங்கும் என்பதை தங்களது பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.