அதிக கட்டண வசூல்.! ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் போட்ட அரசு
அதிக கட்டணம் வசூலித்த 49 ஆம்னி பேருந்துகளுக்கு 92,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
அதிக கட்டணம்
விடுமுறை காலங்களில் தனியார் பேருந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என போக்குவரத்துறை தனியார் பேருந்துகளுக்கு உத்தரவிட்டிருந்தன. ஆனால், விழாக்காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர் கதையாக உள்ளது.
அபராதம் போட்ட அரசு
விடுமுறையின போது தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என சென்னையில் கோயம்பேடு, போரூர் ஆகிய பகுதிகளில் போக்குவாரத்து துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கடந்த 23ஆம் தேதி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அதில் தற்போது வரை பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது, ஆவணங்களை புதுப்பிக்காமல் வைத்திருப்பது உள்ளிட்ட புகார்களின் அடிப்படியையில் 49ஆம்னி பேருந்துகளுக்கு 92,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதில் அதிக கட்டணம் செலுத்திய பயணிகளுக்கு 9,200 ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டது.
இன்னும் விடுமுறை இருப்பதால், வரும் ஜனவரி 2ஆம் தேதி வரை தொடரும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.