எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு .. திமுக அமைச்சரின் அவதூறு பேச்சு- அதிமுக கொடுத்த பதிலடி!
தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உருவப்படத்தை கிழித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா
காஞ்சிபுரத்தில் நடத்த திமுக நிகழ்ச்சியில் நடிகர்களை ரசித்துவிட்டு வந்துவிட வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் வருகிறார்கள்.
ஆனால் நடிகர்கள் முதலமைச்சர் ஆவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது" என்று தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியிருந்தார்.
அவதூறாக விமர்சனம்..
இவரின் பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் புதுச்சேரியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக விமர்சனம் செய்த அமைச்சர் தா.மோ.அன்பரசனை கண்டித்து அண்ணா சிலை அருகே கண்டன மறியல் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் படத்தை கிழித்து எறிந்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறித்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.