நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் :ஏழைக் காவலன் முதல் புரட்சித் தலைவர் வரை

MGR ADMK
By Irumporai 3 நாட்கள் முன்

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரனை தெரியுமானு கேட்டா, எல்லாரும் கொஞ்சம் யோசிப்பாங்க.. ஆனா, எம்.ஜி.ஆரைத் தெரியுமானு கேட்டுப்பாருங்க. தெரியாதுன்னு யார்னாலயும் சொல்லமுடியாது.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் :ஏழைக் காவலன் முதல் புரட்சித் தலைவர் வரை | Facts About M G Ramachandran In Tamil

அப்படியொரு அடையாளத்தை உருவாக்கிச் சென்றவர் அவர். திரையுலகில் அவர் ஒரு வாத்தியார் , மக்கள் மனதில் இதயக்கனி இவ்வாறு பல அடையாளம் உருவாவதற்கு, எம்ஜிஆரான மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் கடந்து வந்த பாதை அவ்வுளவு சுலபமானது அல்ல .

பிறப்பு

இலங்கையின் கண்டிக்கு அருகில் உள்ள நாவலப்பிட்டி-ன்ற கிராமத்துல மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்.ஜி.ஆர். தாயகமான தமிழகம் திரும்பிய சில நாட்களிலேயே எம்.ஜி.ஆரின் தந்தை காலமாக குடும்பம் வறுமையில் சிக்கியது . பள்ளிப்படிப்பை தொடர முடியாத காரணத்துனால நாடகக் கம்பனில வேலைக்கு சேர்ந்தனர் எம்.ஜி.ஆரும் அவரோட அண்ணன் சக்கரபாணியும்.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் :ஏழைக் காவலன் முதல் புரட்சித் தலைவர் வரை | Facts About M G Ramachandran In Tamil

நடிப்பு

பள்ளியில் படிக்கும்போதுலவகுசான்ற நாடகத்துல லவனாக நடிச்சார் எம்.ஜி.ஆர். அவரோட தோற்றத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்து, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனி வேலை கொடுக்கின்றது.அண்ணனையும் சேர்த்துக்கிட்டாத்தான் நான் வருவேன்னு சொல்லிடுறார் எம்.ஜி.ஆர். காரணம் குடும்பத்தின் வறுமை.

படிக்க வேண்டிய வயசுல இருக்குற பசங்கள பிழைப்புக்காக நடிக்க அனுப்பவேண்டியதா போச்சேனு சொல்லி எம்ஜியாரின் தாய் சத்யா வருத்தப்பட்டுள்ளார். எம்.ஜி.ராமச்சந்திரன் முதல் முதலில் நடித்த திரைப்படத்தின் பெயர் 'சதிலீலாவதி' ஆகும்.

இத்திரைப்படம் 1936ஆம் ஆண்டு வெளியானது. இருப்பினும் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த 'ராஜகுமாரி' என்ற திரைப்படம்தான் எம்.ஜி.ஆரை தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆக்கியது.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் :ஏழைக் காவலன் முதல் புரட்சித் தலைவர் வரை | Facts About M G Ramachandran In Tamil

இத்திரைப்படத்தில் தான் எம்.ஜி.ஆர் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமானார். எம்.ஜி.ஆர் தனது வாழ்நாளில் மொத்தம் 136 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தவை ஆகும். எம்.ஜி.ஆர் நடித்த கடைசி திரைப்படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்ற திரைப்படம் ஆகும்.  

அரசியல் வாழ்க்கை

திரைப்படங்களில் எம்.ஜி.ஆரின் புரட்சிகரமான நடிப்பால் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் அவருக்கு ரசிகர் கூட்டம் பெருகியது. தனது திரைப்படங்களின் மூலமாக மக்களுக்கு நல்ல கருத்துக்களை சுவாரஸ்யமான வழியில் எடுத்துச் சென்றார் எம்.ஜி.ராமச்சந்திரன்.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் :ஏழைக் காவலன் முதல் புரட்சித் தலைவர் வரை | Facts About M G Ramachandran In Tamil

ஊக்கமளிக்கும் அவரது திரைப்பட பாடல்கள் அவரது ரசிகர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றது. திரைப்படங்கள் மூலமாக எம்ஜிஆருக்கு தமிழகத்தில் பெரும் மக்கள் செல்வாக்கு அக்காலகட்டத்தில் உருவாகியிருந்தது. பேரறிஞர் அண்ணா மீது பெரும் பற்றும், பாசமும் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் :ஏழைக் காவலன் முதல் புரட்சித் தலைவர் வரை | Facts About M G Ramachandran In Tamil

அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். திரைப்படங்களின் மூலம் பெரும் மக்கள் செல்வாக்கு ஏற்கனவே எம்.ஜி.ஆருக்கு இருந்ததால் திமுகவின் பிரச்சார பீரங்கியாக எம்ஜிஆர் திகழ்ந்தார். கட்சியின் முக்கிய பொறுப்புகள் எம்ஜிஆரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் :ஏழைக் காவலன் முதல் புரட்சித் தலைவர் வரை | Facts About M G Ramachandran In Tamil

அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தில் 1953ஆம் ஆண்டில் தன்னை எம்ஜிஆர் இணைத்துக் கொண்டார். தேசிய அரசியலில் இருந்து திராவிட அரசியலுக்கு எம்ஜிஆர் வருவதற்கு உரமாக இருந்தவர் மறைந்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி. இருவரும் திரைத்துறையிலும் அதற்கு முன்பும் மேடை நாடக வசனங்கள், திரையுலக பிரவேசத்துக்கு முந்தைய நட்புறவை கொண்டிருந்தவர்கள்.

அந்த உறவுதான் திமுக தலைவர் அண்ணாதுரையிடம் எம்ஜிஆருக்கு நட்பை ஏற்படுத்தித் தர கருணாநிதியை தூண்டியது. எம்ஜிஆருக்கு பொது மக்களை வசீகரிக்கக் கூடிய ஆற்றலும் திறமையும் இருப்பதை உணர்ந்த அண்ணாதுரை, அவர் மூலம் வெகுஜன மக்களிடம் திமுகவை கொண்டு சேர்க்க முற்பட்டார். 1962இல் தனது 50ஆவது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர். 1969இல் திமுகவின் பொருளாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார். தமிழக அரசியல் வரலாற்றில் 1960களில் ஈடு இணையற்ற இரட்டையர் போல நெருங்கிய நட்பை கருணாநிதியும் எம்ஜிஆரும் பாராட்டி வந்தனர். அந்த காலகட்டங்களில் எம்ஜிஆர் நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் கருணாநிதி.

1969இல் அண்ணாதுரை காலமானார். அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் திமுகவில் கட்சி நிதியில் முறைகேடு நடப்பதாக எம்ஜிஆர் குற்றம்சாட்ட, இரட்டையர் போல உறவைப் பாராட்டி வந்த எம்ஜிஆரும் கருணாநிதியும் பிரிந்தனர்.

அதன் விளைவு, திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கம் என்ற வடிவில் எதிரொலித்தது. ஆனால், அத்துடன் அரசியல் பொதுவாழ்க்கை முடிந்து விடவில்லை என்று கருதிய எம்ஜிஆர். 1972இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

தனது புதிய கட்சி அண்ணாவின் கோட்பாடுகளை பின்பற்றும் என்று அறிவித்தார் எம்ஜிஆர். இது பற்றி ஒருமுறை எம்ஜிஆரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கருணாநிதியின் கொள்கைகளை திமுக பின்பற்றுகிறது. ஆனால் அதிமுக, அண்ணாவின் கொள்கையை பின்பற்றுகிறது என்று கூறினார். 

அதிமுக தொடக்கம் 

1975ஆம் ஆண்டில் நாட்டில் அவசரநிலையை இந்திரா காந்தி அரசு அமல்படுத்திய வேளையில், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி, அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் விளைவாக அவரது அரசு கலைக்கப்பட்டது.

பின்னர், 1977இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, மிகப்பெரிய பலத்துடன் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வென்று, மொரார்ஜி தலைமையில் ஆட்சி ஏற்பட்டது.

[

அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார் எம்ஜிஆர். பின்னர் சரண் சிங் அரசுக்கும் தமது ஆதரவை 1979ஆம் ஆண்டுவரை அளித்தார் எம்ஜிஆர். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் :ஏழைக் காவலன் முதல் புரட்சித் தலைவர் வரை | Facts About M G Ramachandran In Tamil

1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

[

1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது.

1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. எந்த அரசியல் கட்சிக்கு எதிராக புதிய கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தாரோ அந்த அரசியல் கட்சி தனது ஆயுள் முடிவுறும்வரை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத அளவுக்கு அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதரவைப் பெற்றிருந்தார் எம்ஜிஆர்.

அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்து வாக்குகளை கோரும் அளவுக்கு, தனக்கென ஒரு வாக்கு வங்கியை இன்றளவும் பெற்றுள்ளார் எம்ஜிஆர், ஆம் இப்போதும் எங்கள் வீட்டு பிள்ளைதான் பலரது வீடுகளிலும் மனங்களிலும்