மோடியின் வாக்குமூலம் - முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் - மனோ தங்கராஜ்
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்பானி, அதானியிடம் மூட்டை மூட்டையாக பணம் வாங்கிக்கொண்டு அவர்களைப் பற்றி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், பதவி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் பதிவு வருமாறு,
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம் !!
அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை எல்லாம் எதிர்கட்சிகளுக்கு மட்டும் தான் அதானி, அம்பானிக்கு பொருந்தாது என இதன் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.