அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள் - தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்!

M K Stalin Government of Tamil Nadu Kallakurichi Madras High Court
By Vidhya Senthil Jul 28, 2024 05:08 AM GMT
Report

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சாதி பெயர்கள் உள்ளன .

கள்ளக்குறிச்சி

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கல்வராயன் பகுதி மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை எடுத்தது.

அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள் - தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்! | Tn Govt To Remove Caste Names From Govt Schools

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.

நாளை ஓய்வு பெறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்

நாளை ஓய்வு பெறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்

சென்னை உயர் நீதிமன்றம்

அதில் ‘‘கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருவதாகவும் ,ஆனால் அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளதா, இல்லையா என்பது குறித்து விளக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள் - தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்! | Tn Govt To Remove Caste Names From Govt Schools

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து , அரசு வழக்கறிஞர் ஒருவர் ,''மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சாதி பெயர்கள் உள்ளன.என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தெருப் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றியதுபோல,

பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களையும் அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.