நாளை ஓய்வு பெறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்

chennai retired highcourt judge n. kirubakaran
By Anupriyamkumaresan Aug 19, 2021 07:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன் நாளை ஓய்வு பெறுகிறார். இதையொட்டி இன்று மாலை அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெறுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடந்த 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

நாளை ஓய்வு பெறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் | Chennai Highcourt Judge N Kirubakaran Retired

சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், மத்திய, மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.

இதையடுத்து கிருபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார்.

நாளை ஓய்வு பெறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் | Chennai Highcourt Judge N Kirubakaran Retired

இந்நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி 62 வயது பூர்த்தியாவதையொட்டி நாளை ஓய்வு பெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.