தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் தமிழகம் - கேரளா அரசுகள்..!! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு !!

M K Stalin Tamil nadu Kerala Pinarayi Vijayan
By Karthick Nov 05, 2023 10:24 AM GMT
Report

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழகம் மற்றும் கேரள அரசுகள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.

எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர் வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசில் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று கூறி, ஜவுளித் தொழில் நலிவடையும் சூழலுக்கு காரணம் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வு தான் என குற்றம்சாட்டினார்.

tn-govt-supports-terrrorism-says-l-murugan

வீடுகளுக்கும் 3 மடங்கு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர் என்றும் ஜவுளித் துறையினர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஏற்கனவே வேங்கை வயல் விவகாரதில் உரிய நடவடிக்கை எடுத்து இருந்திருந்தால் இன்று நெல்லையில் வன்கொடுமை நடந்து இருக்காது என்று விமர்சித்தார். பொருளாதாரம் குறைவாக உள்ளது என்று ஒரே சமுதாயத்தை சார்ந்தவர்களை வெட்டி கொள்கிறார்கள்.

tn-govt-supports-terrrorism-says-l-murugan 

யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 1000-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்களை நீக்கி உள்ளன என்று கூறி, தொழில் துறையினருக்கு ஆதரவான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன எனக் கூறினார்.

விஜய் அரசியலுக்கு வரட்டும்...ஆனா அதுக்கு முன்னாடி...!! வெற்றிமாறன் சொன்ன விஷயம்!!

விஜய் அரசியலுக்கு வரட்டும்...ஆனா அதுக்கு முன்னாடி...!! வெற்றிமாறன் சொன்ன விஷயம்!!

தீவிரவாதிகளுக்கு ஊக்கம்

பாஜகவினர் மீது வழக்குகள் போட்டாலும் இன்னும் வேகமாக வேலை செய்வார்கள் என்று உறுதிதெரிவித்த எல்.முருகன், அரசு அனுப்பும் கோப்புகளை எல்லாம் கண்ணை மூடி கை எழுத்து போடுவது ஆளுநர் வேலை இல்லை என்று விமர்சித்தார். ஆளுநர் அலுவலம் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, ஆளுநரை மிரட்டும் வகையில் எல்லாம் வேலை செய்தால் எடுபடாது என திட்டவட்டமாக கூறி, குறைந்த விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

tn-govt-supports-terrrorism-says-l-murugan

மத்திய பிரதேசத்தில் மின் கட்டணம் எல்லாம் குறைவு என்றும் தொழில் துறையை ஊக்குவிக்க தவறுகிறது தமிழ் நாடு அரசு என குறைகூறினார். மேலும், தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் செய்துவருகிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டி, ஆளுநர்களை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது என்று சுட்டிக்காட்டி. ஆளுநரை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றெல்லாம் ஆளுநரை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.