இனி ரேஷன் கடைகளில் சேமிப்பு கணக்கு துவங்கலாம் - தமிழக அரசின் புதிய திட்டம்

Tamil nadu Government of Tamil Nadu Money
By Karthikraja Oct 24, 2024 08:33 AM GMT
Report

 ரேஷன் கடைகளிலே சேமிப்பு கணக்கு தொடங்கும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

ரேஷன் கடை

ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையின் போது கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி, சேலையும் வழங்கப்படுகிறது. 

ரேஷன் கடைகளில் சேமிப்பு கணக்கு

தற்போது ரேஷன் கடைகளில் சேமிப்பு கணக்கு துவங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  

இனி பணம் எடுக்க ATM போக வேணாம்; ரேஷன் கடை போதும் - அரசின் அசத்தல் திட்டம்

இனி பணம் எடுக்க ATM போக வேணாம்; ரேஷன் கடை போதும் - அரசின் அசத்தல் திட்டம்

சேமிப்பு கணக்கு

இதில் கூறப்பட்டுள்ளதாவது, "அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி, வங்கியால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில், மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். 

கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர் சராசரி வயது, 53 ஆக உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடத்தப்படும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் கார்டுதாரர்களுக்கு, பல்வேறு துறைகளின் நலத் திட்டங்களும், ரேஷன் கடை வாயிலாகவே வழங்கப்படுகின்றன. 

ரேஷன் கடைகளில் சேமிப்பு கணக்கு

கூட்டுறவு ரேஷன் கடைகள் வாயிலாக, கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு மற்றும் கடன் சேவை மக்களை சென்றடையும் வகையில், அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், சேமிப்பு கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊக்கத்தொகை

அனைத்து ரேஷன் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள், கடன் திட்டங்கள் குறித்த கையேடு வினியோகிக்கவும், ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு, சேமிப்பு கணக்கு விண்ணப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.

ரேஷன் ஊழியர்கள் வாயிலாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும், பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாயிலாக துவக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு, கடை ஊழியர்களுக்கு தலா ஒரு கணக்குக்கு, ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

ஏடிஎம் கார்டு

சேமிப்பு கணக்குதாரர்களுக்கு, கூட்டுறவு வங்கி கடன் திட்டங்கள், அரசின் கடன் திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள் குறித்த கையேடுகள், வங்கியின் மின்னணு பரிவர்த்தனை வசதி, ஏடிஎம் கார்டு வசதிகளை வழங்க வேண்டும்.

இதுகுறித்து, ரேஷன் கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள், பண்டகசாலை துணை பதிவாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் மக்கள், சேமிப்பு கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.