இலவசமாக வாகன ஓட்டுநர் பயிற்சி - தமிழக அரசின் புதிய திட்டம்
தமிழ்நாடு அரசு இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
திறன் தமிழ்நாடு திட்டம்
வாகன ஓட்டுனர்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வருவதால், குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் வாகன ஓட்டுனர்களுக்கு தேவை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நான் முதல்வன் மற்றும் திறன் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு இந்த இலவச வாகன ஓட்டுநர் பயிற்சியை அளிக்க உள்ளது.
வாகன ஓட்டுநர் பயிற்சி
இதில் 45-நாள் LMV/HTV மற்றும் 30-நாள் Forklift Operator கோர்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு நாளுக்கு 6 மணி நேரம் பயிற்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 8வது, 10வது அல்லது 12வது வகுப்பு கல்வி தகுதி கொண்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும். 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
தற்போது, ரெட் ஹில்ஸ்(திருவாரூர் மாவட்டம்), மறைமலைநகர்(காஞ்சிபுரம் மாவட்டம்), ஸ்ரீனிவாச பிள்ளை சாலை (தஞ்சாவூர்) ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. வரும் நாட்களில் மற்ற பகுதிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்படும். இந்த முன்முயற்சியானது உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் வாகன ஓட்டுனர் வேலைவாய்ப்புகளை பெற உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில்போர்க் லிப்ட் ஆபரேட்டர்(Forklift Operator) பயிற்சி பெற https://finance.tnskill.tn.gov.in/skillwallet/course/1633 இணையப்பக்கத்திலும், இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற https://finance.tnskill.tn.gov.in/skillwallet/course/1706 இணைய பக்கத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.