Sunday, May 11, 2025

அரசு பேருந்தில் பயணித்தால் பைக், டிவி, ஃப்ரிட்ஜ் பரிசு - அரசின் புதிய திட்டம்

Tamil nadu S. S. Sivasankar
By Karthikraja 6 months ago
Report

அரசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு பைக்  பரிசு வழங்க உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அரசு பேருந்து

தொலைத்தூர பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பரிசு திட்டத்தை தமிழக போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியது. 

setc bus

இதன்படி வார விடுமுறை நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களை தவிர்த்து இதர நாள்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளில் 13 பேரை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பரிசு திட்டம்

அவர்களில் முதல் 3 பேருக்கு தலா ரூ.10,000 மற்றும் அடுத்த 10 பேருக்கு தலா ரூ.2,000 பரிசு வழங்கும் திட்டம் ஜனவரி 2024 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

setc bus prize bike tv fridge

தற்போது நவம்பர் 21 முதல் 20 ஜனவரி 2025 வரை TNSTC இணையத்தளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிப்போருக்கு சிறப்பு குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்துள்ளனர்.

முதல் பரிசாக இருசக்கர வாகனம், 2 ஆம் பரிசாக LED டிவி, 3ஆம் பரிசாக ஃப்ரிட்ஜ் வழங்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.