இனி இதுவும் வேளாண் தொழில்தான் .. தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!
காளான் வளர்த்தல் மற்றும் பயிரிடுதலை வேளாண் செயல்பாடுகளின் கீழ் சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழகத்தில் விவசாயிகள் பயிர்த்தொழிலை மட்டுமே சார்ந்திருக்காமல் ஆண்டு முழுவதும் நிலையான வருவாய் பெறும் வகையில் வேளாண் சார்ந்த பிற தொழில்களான கால்நடை வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், மீன் வளம், தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்த்தல்,
வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடும் வகையில் அவர்களை தமிழக வேளாண்துறை ஊக்குவித்து, சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு சட்டபேரவையில் வேளாண்மை – உழவர் நலத்துறையில் 30 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
காளான் வளர்த்தல்
அதில் காளான் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதன்படி ,காளான் வளர்த்தல் மற்றும் பயிரிடுதலை வேளாண் செயல்பாடுகளின் கீழ் சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் வேளாண்துறை செயலர் அபூர்வா வெளியிட்ட அறிவிக்கையில், “வெள்ளை மொட்டுக் காளான் (பட்டன் மஷ்ரூம்), பால் காளான் (மில்கி மஷ்ரூம்), சிப்பிக்காளான் ( ஆய்ஸ்டர் மஷ்ரூம்) மற்றும் இதர உணவாக எடுத்துக் கொள்ளத்தக்க வகையிலான காளான்கள் பயிரிடுதல் மற்றும் வளர்த்தல் ஆகியவை தமிழகத்தில் வேளாண் செயல்பாடுகளின் கீழ் வகைப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.