குட் நியூஸ்.. இந்தமுறை பொங்கல் பரிசுடன் ரூ.1000 அல்ல ரூ.2000 வழங்க திட்டம் - அரசு தகவல்!
பொங்கல் பரிசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல்
தமிழகத்தில் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல், இது தமிழ் மாதத்தில் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு வழங்கப்படும்.
அதில் பொங்கலுக்கு தேவையான பொருட்களுடன் சேர்ந்து வேஷ்டி, சேலை, மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்பொழுது வேஷ்டி, சேலை வழங்குவதற்கு மத்திய அமைச்சர் தமிழக வருமான வருதுறையினரிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
அரசு தகவல்
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பேசிய அவர், "மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படாமல் இருப்பதால் அது குறித்த அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் வர இருக்கும் நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000க்கு பதிலாக ரூ.2000 வழங்கலாமா என அரசு பரிசீலித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.