இனி இப்படி அரசு ஊழியர்கள் லீவு எடுத்தால் நடவடிக்கை - முக்கிய உத்தரவு

Tamil nadu DMK
By Sumathi Apr 11, 2025 04:53 AM GMT
Report

அறிவிப்பு இல்லாமல் விடுமுறை எடுக்கும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 விடுமுறை

அரசு போக்குவரத்துத் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தினமும் பஸ் ஓட்ட வேண்டிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் முதல் நாளே Control Chart-ல் கையெழுத்து போட வேண்டும்.

tn govt bus drivers

ஒருவேளை டிரைவர் அல்லது கண்டக்டர் மாலை 5 மணிக்குள் லீவு கேட்டால், உடனே வேறொருவரை வைத்து பஸ்சை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பரந்தூர் புதிய விமான நிலையம்; மத்திய அரசின் க்ரீன் சிக்னல் - பணிகள் எப்போது?

பரந்தூர் புதிய விமான நிலையம்; மத்திய அரசின் க்ரீன் சிக்னல் - பணிகள் எப்போது?

அரசு உத்தரவு

பணிக்கு வராமல் முன் அறிவிப்பின்றி விடுமுறை எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமான விசேஷ நாட்களில் ( முக்கியமாக முகூர்த்த நாட்கள்) அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்.

இனி இப்படி அரசு ஊழியர்கள் லீவு எடுத்தால் நடவடிக்கை - முக்கிய உத்தரவு | Tn Govt Drivers Conductors Leave Without Permision

பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் காலை மற்றும் மாலை நேரங்களான Peak Hours நேரத்தில் இயக்கப்படும் General Shift பேருந்துகளை எக்காரணம் கொண்டு Single Shift ஆக இயக்க படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.